- கிருஷ்ணகிரி
- பெங்களூரு
- கோயம்புத்தூர்
- உத்தனப்பள்ளி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- ராயகோட்டை
- இன்ஸ்பெக்டர்
- பெரியதம்பி
- டெம்போ
கிருஷ்ணகிரி, டிச.2: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே பெங்களூரில் இருந்து கோவைக்கு டெம்போவில் கடத்திய ₹4 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை உத்தனப்பள்ளி அருகே,சூளகிரி சந்திப்பு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட ₹4 லட்சம் மதிப்பிலான 437 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததும், அதை கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குட்கா பொருட்களுடன், ₹4 லட்சம் மதிப்பிலான டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரான கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் தளம்கேரி கிராமத்தை சேர்ந்த நரசிம்மராஜூ (39) என்பவரை கைது செய்து, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.
The post டெம்போவில் கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.