×
Saravana Stores

மதுபானம் பதுக்கி விற்ற வாலிபர் கைது

ஊத்தங்கரை, நவ.29: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார், சென்னப்பநாயக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, டாஸ்மாக் கடைக்கு பின்பகுதியில் சூதாடிக்கொண்டிருந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பி நிலையில், இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகன் (57), செல்வகுமார் (26) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, தப்பியோடிய சின்னமணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் கல்லாவி எஸ்எஸ்ஐ சசிகுமார் மற்றும் போலீசார், புதூர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மதுபாட்டில்கள், டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மதுபானம் பதுக்கி விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Krishnagiri district ,SI Mohan ,Chennapanayakkanur ,Tasmac ,
× RELATED வேளாண் கருவிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்