- ஊத்தங்கரை
- அண்ணாநகர்
- காமராஜ் நகர்
- காளையன் நகர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
ஊத்தங்கரை, டிச.3: பெஞ்சல் புயல் தாக்கத்தால், ஊத்தங்கரையில் பெய்த கனமழையால் பாதித்த அண்ணா நகர், காமராஜர் நகர், கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சரயு, கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் கதிரவன், முன்னாள் எம்பி சுகவனம், ஊத்தங்கரை ஒன்றிய சேர்மன் உஷாராணி குமரேசன், ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், திருவனப்பட்டி ரஜினி செல்வம்,
எக்கூர் செல்வம், ஊத்தங்கரை பேரூர் செயலாளர் தீபக், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, துணை தலைவர் கலைமகள் தீபக், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, மாவட்ட துணை செயலாளர் சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயசந்திர பாண்டியன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் காந்தி, அவை தலைவர் தணிகை குமரன், கவுன்சிலர்கள் கதிர்வேல், குப்புசாமி, சாதிக் பாஷா, டாக்டர் கந்தசாமி, சுமித்ரா, மிட்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னதாய் உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.
The post மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி appeared first on Dinakaran.