×

துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் மாணவன் பலி

துவரங்குறிச்சி, நவ.14: திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் மகன் உசேன் (19), அவரது நண்பர் ஷேக் அப்துல்லா (30). இருவரும் பைக்கில் திருச்சியில் இருந்து மதுரைக்கு சென்று விட்டு மீண்டும், நேற்று இரவு திருச்சி திரும்பினர்.

அப்போது திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சி பிரிவு சாலை அருகே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் மணிவண்ணன் (28) மற்றும் அவரது அக்கா மகன் நவீன் (4) ஆகியோர் வந்த டூவீலர் டூவீலர் எதிர்பாராத விதமாக மோதியதில் உசேன் மற்றும் நான்கு வயது சிறுவன் நவீன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதனை தொடர்ந்து சிறுவன் நவீன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவன் உசேன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் உயிரிழந்த உசேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi ,Duwarankurichi ,Pakrudeen ,Usain ,Thennur ,Trichy ,Sheikh Abdullah ,Madurai ,Duvarankurichi ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்