×

மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 450 பேர் உழவாரப்பணி

 

சமயபுரம், டிச.9: தமிழகத்தில் சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழும் சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள கோயில் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் பிரம்மாவின் தனி சிறப்பு கோயிலாகும். இங்கு இவருக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தினமும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருகை தருகின்றனர். சமீப நாட்களாக பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவில் வருகை தருகின்றனர். மேலும் கோயிலின் சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இதனால் தினமும் இப்பகுதிகளில் மக்களின் கூட்டமும் அதிகமாகவே காணப்படும்.

இந்நிலையில் இக்கோவிலுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் மதில் சுவர்கள் சுற்றிய பகுதிகளில் செடிகொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடந்தது. இதனால் வாகனங்கள் நிறுத்தவும், கிரிவல பாதையும் புதர்போல் காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட திருச்சிற்றம்பலம் உழவாரப்பணி குழுவினர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். இதில் 450க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு நாள் முழுவதும் ஈடுபட்ட இந்த உழவாரப்பணியின்போது குளம், மதில் சுவர் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பல இடங்களில் செடிகொடிகளை அகற்றி தூய்மை படுத்தினர்.

The post மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 450 பேர் உழவாரப்பணி appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Brahmapureeswarar temple ,Samayapuram ,Brahmapureeswarar ,temple ,Sirukanur ,Tamil Nadu ,Brahma ,
× RELATED திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்