×

மருங்காபுரி வட்டாரத்தில் உலக மண் தினவிழா

 

திருச்சி, டிச.11: திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரம் ஆமணக்கம்பட்டி கிராமத்தில் உலக மண் தினவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு மருங்காபுரி வேளாண்மை துறையின் வேளாண் உதவி இயக்குநர் கோமதி தலைமை வகித்தார். ஆமணக்கம்பட்டி ஊராட்சி தலைவா் வரதராஜன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலா் அருண் ஜீலியஸ் விவசாயிகளுக்கு, மண் வளத்தை போற்றி பாதுகாக்கும் வகையில், மண் வளத்தை பாதுகாத்தல், மண் மாதிரி எடுத்தல், மண் மாதிரிகள் சேகாிக்கும் முறைகள், மண்ணில் அடங்கியுள்ள பேரூட்டசத்துகள் ஆகியன குறித்து விளக்கியதுடன், விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விரிவாக பதிலளித்தார். விழாவில் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டன. உதவி வேளாண்மை அலுவலா் மோகனவள்ளி வேளாண்மைத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார். விழா ஏற்பாடுகளை வேளாண்மைத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

The post மருங்காபுரி வட்டாரத்தில் உலக மண் தினவிழா appeared first on Dinakaran.

Tags : World Soil Day ,Marungapuri District ,Trichy ,Amanakambatti ,Marungapuri ,Trichy district ,Gomati ,Assistant Director ,Marungapuri Agriculture Department ,Amanakampatty ,Panchayat Leader ,Varadarajan ,Dinakaran ,
× RELATED அரியலூர் அருகே உலக மண் தின விழா