- பச்சமலை
- பள்ளத்தாக்கில்
- துரையூர்
- சஹரையூர்
- எல்ஏ ஸ்டாலின் குமார்
- பச்சைமலை ஜார்ஜ்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஸ்டாலின் குமார்
- திருச்சி சட்டமன்றம்
- மாவட்டம்
- பச்சைமலை வையகல
- தின மலர்
துறையூர், டிச.11:மழையின் போது ஏற்படும் வௌ்ளப்பெருக்கால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து சேதமாகிறது. எனவே பச்சைமலை வாய்க்காலை விரைவில் தூர்வார வேண்டும் என சட்டப்பேரவையில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வலியுறுத்தினார். திருச்சி மாவட்டம் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் சட்டசபையில் நேற்று பேசியபோது, என்னுடைய துறையூர் தொகுதியில் பச்சைமலையில் மழையின் காரணமாக. கடந்த வாரம் செங்காட்டுப்பட்டி கீரம்பூர், துறையூர் பெரிய ஏரி, சின்ன ஏரி, செல்லிப்பாளையம், மருவத்தூர், சித்திரப்பட்டி, சிங்களாந்தபுரம், தவுட்டுப்பட்டி, ஆதனூர், கட்டணாம்பட்டி, நல்லியாம்பட்டி, வெங்கடேசபுரம், முருகூர், கோவிந்தாபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் விளை நிலங்களிலும், வீடுகளில் உள்ளே புகுந்தது.
இப்பகுதி விவசாயிகள் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரிடம் வெங்காயம், நெற்பயிர் விளைநிலங்கள் மழை நீரினால் சேதம் அடைந்தது பாதிக்கப்பட்டதாக கோரிக்கை வைத்தனர். எனவே நீர்வளத் துறை அமைச்சர் பச்ச மலையில் இருந்து வரும் வாய்க்கால் மற்றும் வடிநீர் வாய்க்காலையும் நிரந்தரமாக தூர்வாரி சீரமைத்து தர வேண்டுமென சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
The post பச்சைமலை வாய்க்காலை விரைவில் தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.