- ஐயா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- பீகார்
- உத்திரப்பிரதேசம்
- கேரளா
- மேற்கு வங்கம்
- சத்தீஸ்கர்
- கோவா
- குஜராத்
புதுடெல்லி: பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கின. அங்கு 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, உத்திர பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர், கேரளா, கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியலில், நாடு முழுவதும் 10 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் சுமார் 6.56 கோடி வாக்காளர்கள் அதாவது மொத்த வாக்காளர்களில் 13 சதவீதம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் சுமார் 19 சதவீதம் ஆகும். அங்குள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 15.44 கோடியிலிருந்து 12.55 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல் அந்தமானில் அதிகபட்சமாக 21 சதவீதம், தமிழ்நாட்டில் 15.18 சதவீதம், சட்டீஸ்கர் மாநிலத்தில் 13 சதவீதம், கேரளாவில் 8.64 சதவீதம் மற்றும் மேற்கு வங்கத்தில் 7.6 சதவீதம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. உத்திர பிரதேசத்தில் பழைய ஆவணங்களுடன் ஒத்திசைக்க முடியாத 1.4 கோடி பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அக்டோபர் 27 அன்று தொடங்கிய சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின் இரண்டாம் கட்டத்திற்கு முன்பு, இந்த 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50.90 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தனித்தனி வரைவுப் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு, வாக்காளர்களின் எண்ணிக்கை 44.40 கோடியாகக் குறைந்துள்ளது.
