அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் ஜகதீஷ்பூர் தொகுதி எம்எல்ஏ சுரேஷ் பாசி. பாஜவை சேர்ந்த இவர் பேசுவதாக ஒரு காணொ லி இணையதளங்களில் பரவி வருகிறது. அதில், “நான் மசூதிகளுக்கு செல்வதில்லை. கடந்த காலங்களில் சென்றதில்லை.
இனியும் செல்ல மாட்டேன். முஸ்லிம்களிடம் வாக்கு கேட்க நான் செல்வதில்லை. அவர்களின் மகிழ்ச்சி, துக்கங்களில் கலந்து கொள்வதில்லை” என அவர் பேசுவதாக பதிவாகி உள்ளது. சுரேஷ் பாசியின் இந்த பேச்சு சர்ச்சையை எழுப்பி உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
