×

பனிச்சறுக்கு விபத்தில் சிக்கிய ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் மகன் மரணம்

மும்பை:  வேதாந்தா நிறுவனம், உலகளவில் கனிம மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம்தான், தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையும் நடத்தி வந்தது. வேதாந்தா குழுமத்தின் உரிமையாளராக அனில் அகர்வால் உள்ளார்.

இவரது மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், அக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராக இருந்தார்.

இவர் அமெரிக்காவில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனே நியூ யார்க் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Tags : Sterlite ,Mumbai ,Vedanta Company ,Thoothukudi, Tamil Nadu ,Anil Agarwal ,Vedanta Group ,Agnivesh Agarwal ,
× RELATED தேர்தலுக்கு முன் ஒன்றிய அரசை...