×

சபரிமலை கோயில் அருகே பாக். கொடி பறக்க விடப்பட்டதா? வீடியோ வெளியானதால் சர்ச்சை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வரும் 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும், அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று சபரிமலை கோயில் அருகே பாகிஸ்தான் நாட்டின் கொடி கட்டப்பட்டிருந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். இதில் கோயில் அருகே பக்தர்கள் கூட்டமாக அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கம்பியில் பச்சை நிறத்தில் ஒரு கொடி கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த கொடியை பரிசோதித்தபோது அது பாகிஸ்தான் நாட்டின் கொடி அல்ல என தெரியவந்தது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து குழுக்களாக வரும் பக்தர்கள், கூட்டத்தில் யாராவது காணாமல் போனால் கண்டுபிடிப்பதற்காக கொடிகளை கொண்டு வருவது உண்டு.

இப்படி வந்த பக்தர்கள் தான் பச்சை நிற கொடியை கொண்டு வந்திருந்தனர். இவர்கள் கோயிலுக்கு அருகே அமர்ந்திருந்த இடத்தில் இந்தக் கொடியை கட்டி வைத்திருந்தனர். அதை யாரோ வீடியோ எடுத்து சபரிமலையில் பாகிஸ்தான் கொடி கட்டப்பட்டுள்ளதாக கூறி தவறான தகவலை பரப்பினர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Sabarimala temple ,Thiruvananthapuram ,Makaravilakku ,Sabarimala Ayyappa temple ,Makarjyothi darshan ,Ponnambalamedu ,
× RELATED பிப்ரவரி 1ம் தேதியான...