×

சந்தேக நிழலில் இருக்கிறார் நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு தகுதி இல்லை: கேரள அரசுக்கு சட்டத்துறை இயக்குனர் பரபரப்பு அறிக்கை

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் கடந்த டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 6 பேருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது. நடிகர் திலீப் உள்பட 4 பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கேரள அரசு சார்பில் அரசு சட்டத்துறை இயக்குனரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

இதன்படி சட்டத்துறை இயக்குனர் கேரள அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு: நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு விசாரணை நீதிமன்றத்தில் வைத்து திறந்து பார்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை மனு செய்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் நீதிபதி சந்தேக நிழலில் இருக்கிறார். இந்த வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது சட்டப்படி செல்லாது.திலீப்பை விடுவித்தது தொடர்பாக நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் ஏற்கத்தக்கதல்ல. அரசுத் தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தகுந்த காரணங்கள் இன்றி நீதிபதி நிராகரித்துள்ளார்.

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை பரிசீலிப்பதில் நீதிபதி ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளார். குறிப்பாக எந்தக் காரணமும் சொல்லாமல் ஆவணங்களை நிராகரித்துவிட்டார். 1709 பக்கங்களை கொண்ட தீர்ப்பில் பல விவரங்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala government ,Thiruvananthapuram ,Dileep ,
× RELATED ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை