திண்டிவனம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்

திண்டிவனம்:  திண்டிவனம் அடுத்த நெடி, மோழியனூரில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் சென்றது.  திண்டிவனம் அடுத்த வீடூரை சேர்ந்த அய்யனார்(35)  ஓட்டி சென்றார். மயிலம் அடுத்த கொடிமா கிராமத்தை சேர்ந்த ரவி(45) கண்டக்டராக இருந்தார். ஆலகிராமத்திலிருந்து சிறிது தூரம்

சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், மயிலம் மற்றும் பெரியதச்சூர் போலீசார் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: