ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை உயர்வு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கை வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான விருப்பாட்சி, கேதையுறம்பு, கள்ளிமந்தையம், தேவத்தூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் முருங்கை செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் முருங்கை காய்கள், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் முருங்கை சாகுபடி குறைந்துள்ளதால் அவற்றின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ மரமுருங்கை ரூ.5க்கும், செடி முருங்கை ரூ.7க்கும், கரும்பு முருங்கை ரூ.10க்கும் விற்பனையானது. இந்நிலையில் வரத்து குறைந்துள்ளதால், தற்போது ஒரு கிலோ மரமுருங்கை ரூ.55க்கும் செடி முருங்கை ரூ.55க்கும், கரும்பு முருங்கை ரூ.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கொண்டுவரப்படும் முருங்கை கேரளா, மும்பை, ஆந்திரா பகுதிகளுக்கு தினமும் அனுப்பப்பட்டு வருகிறது.

Related Stories: