சென்னை: விவாகரத்து மூலம் பிரிந்த திரையுலக காதல் ஜோடி இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி. தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார். பிறகு சிம்பு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் நடித்தார். தற்போது ரவி மோகனுடன் ‘ஜீனி’, கார்த்தியுடன் ‘மார்ஷல்’, ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ஒரு தமிழ் படத்தில் நடித்து வரு கிறார்.
கடந்த ஆண்டு மலையாளத்தில் சூப்பர் வுமன் கேரக்டரில் அவர் நடித்து வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்தது. அதாவது, மோகன்லால் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த அவர், தற்போது இந்தியில் நடிக்கிறார்.
‘துரந்தர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஜாம்பி தொடர்பான படத்தில் நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெய்வேதா இயக்கும் இதில் நடிப்பதற்காக பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட்டிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது இப்படத்தை தென்னிந்திய ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக கல்யாணி பிரியதஷர்னை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
