பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் வெகுளி

சென்னை: ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த ‘அகடம்’ என்ற படத்தை தொடர்ந்து ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தை இயக்கிய இசாக், தற்போது எழுதி இயக்கியுள்ள படம் ‘வெகுளி’. தமிழ்த்திரைக்கூடம், வேதா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் ‘மக்காயலா’, ‘மஸ்காரா போட்டு’ உள்பட 500க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை எழுதியுள்ள பிரியன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் திவ்யா நாயர், ‘பாய்ஸ்’ மணிகண்டன், டேனி, சாப்ளின் பாலு, பூவையார், இமான் அண்ணாச்சி, சர்மி ரவி, சேரன் ராஜ், ரென், ஈரோடு சரவணன் நடித்துள்ளனர். நாகார்ஜூன் ஒளிப்பதிவு செய்ய, நட்ராஜ் அரங்கம் அமைத்துள்ளார். எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, ராம்குமார் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

இலங்கையில் தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் ஷமீல்.ஜே இசை அமைத்துள்ளார். ஹாலிவுட்டுக்கு இணையாக, REAL TIME STRUCTURE முறையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரான இப்படம், ரசிகர்கள் புதிய உணர்வு பெற நவீன சவுண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் நடக்கும் ஒரு கொடூர செயலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: