ரூ.5,00,000 தந்தால் சினிமா விழாவுக்கு வருவேன்: மிஷ்கின் தடாலடி

சென்னை: சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் பங்கேற்று இயக்குனர் மிஷ்கின் பேசியது: என்னை நிறைய சினிமா நிகழ்வுகளுக்கு அழைக்கிறார்கள். தயவுசெய்து என்னை கூப்பிடாதீர்கள். அப்படி கூப்பிட்டால் ஒரு விழாவிற்கு 5 லட்சம் ரூபாய் கொடுங்கள். அதை வங்கியில் போட்டு வைத்துக் கொள்ளலாம். அந்தப் பணத்தை வைத்து என்னுடைய மகளை இன்னும் அதிகமாக படிக்க வைக்கலாம். ஒரு நாளைக்கு ஐந்து அழைப்பு வருகிறது. எனக்கு நிறைய வேலை இருக்கிறது.

இப்போது தான் நிறைய படிக்க நேரம் கிடைத்துள்ளது. பல தொழில்களை செய்துவிட்டு தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவை மிகவும் நேசித்து வந்தேன். சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், ‘பிசாசு 2’, ‘ட்ரெய்ன்’ படங்களுக்குப் பிறகு மிஷ்கின் இருந்த முகவரியே இல்லாமல் போயிடுவார் என கூறியுள்ளார்.

அந்த நண்பரிடம் மிகவும் தாழ்மையாகச் சொல்லிக் கொள்வது, “சீக்கிரம் சினிமாவை விட்டு போய்விட வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். நான் சினிமாவில் மகிழ்ச்சியாகவெல்லாம் இல்லை. நான் மகிழ்ச்சியாக சினிமா எடுத்த காலமெல்லாம் போய்விட்டது. இப்போது நிறைய போட்டி, பொறாமை வந்துவிட்டது. வியாபாரமும் அலைக்கழிக்கிறது. உதிரம் சொட்டச் சொட்டத்தான் நான் சினிமாவில் இருந்துகொண்டு இருக்கேன். இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

Related Stories: