சென்னை: கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது படக்குழு. தற்போது இப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு இதை திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ஜே.கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இதற்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளார்.