பாடலாசிரியர் அஸ்மின் வரலாறு புத்தகம் வெளியானது

சென்னை: இலங்கையின் முன்னணி தமிழ்க் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணமாகக் கொண்ட ஆங்கில நூல் “POTTUVIL ASMIN: From Pottuvil to the World A Global Tamil Voice” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், ஹெல்த் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரேமா சுபாஸ்கரன், மற்றும் புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ் குமரன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

பொத்துவில் அஸ்மின், விஜய் ஆண்டனியின் இசையில் உருவான “தப்பெல்லாம் தப்பே இல்லை” பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 27 ஆண்டு காலமாக கலை, இலக்கியம், ஊடகம், மற்றும் சினிமா துறையில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்திருக்கும் பொத்துவில் அஸ்மின், மறைந்த தமிழ்நாடு முதல்வர் கலைஞர் நினைவாக வைரமுத்து தொகுத்த ‘கலைஞர் 100 கவிதைகள் 100’ கவிதை தொகுப்பிலும் இவரது கவிதை இடம்பெற்றுள்ளன.

Related Stories: