ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகையான லீலா, தமிழில் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ேஜாடியாக நடித்து வருகிறார். தவிர தெலுங்கில் அவர் ‘மாஸ் ஜாதரா’, ‘ராபின்ஹூட்’, ‘உஸ்தாத் பஹத் சிங்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு இளம் நடிகர் நவீன் பொலிஷெட்டி, தொடர்ந்து 3 வெற்றிப் படங்கள் கொடுத்தார். சமீபத்தில் அவரது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிப்பிலிருந்து விலகி ஓய்வெடுத்தார்.
தற்போது குணமடைந்துள்ள அவர், நாகவம்சி தயாரிக்கும் ‘அனகனக ஓக ராஜு’ என்ற படத்தில் நடிக்கிறார். மாரி இயக்கும் இதில் ஹீரோ யினாக லீலாவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், திடீரென்று ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடியால் அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனே இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.