×

2025ல் கோலிவுட் எதிர்நோக்கும் படங்கள்

இந்த ஆண்டில் (2025) வெளியாக உள்ள படங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வர இருக்கும் புதுப் படங்கள் பற்றிய தொகுப்பு இது.

* சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ெஜயிலர் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி முதல்முறையாக நடிக்கிறார். இப்படத்துக்கு உலக அளவில் தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

* வினோத் இயக்கும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டவில்லை. இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். பாலிவுட் ஸ்டார் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். அரசியல் பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* அஜித்குமார் 3 வேடங்களில் நடிக்கும் இப்படத்தை டோலிவுட்டில் புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். பிரபு, திரிஷா, பிரசன்னா, சுனில், யோகி பாபு நடிக்கிறார்கள். முழுநீள ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாக இது உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

* விக்ரம், துஷாரா விஜயன் நடிக்கும் இப்படத்தை அருண்குமார் இயக்குகிறார். விக்ரமின் வித்தியாசமான நடிப்புக்காகவும் சித்தா படத்துக்கு பின் அருண்குமார் இயக்கும் படமென்பதாலும் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது. இம்மாதம் முதலில் 2வது பாகமும் அதற்கு பின் முதல் பாகமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 32 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் இணைந்துள்ள படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிம்பு, திரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன. கேங்ஸ்டர் பாணி கதையாக உருவாகியுள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாகிறது.

* அஜித் குமார், திரிஷா மீண்டும் இணைந்து இதில் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசை. பிரேக் டவுன் ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அஜர்பைஜானில் நடக்கும் ஆக்‌ஷன் திரில்லர் கதையிது. அர்ஜுன் வில்லனாகவும் ரெஜினா வில்லியாகவும் நடித்துள்ளனர்.

* இந்த படங்கள் தவிர தனுஷின் இட்லி கடை, குபேரா, ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம், மகாராஜா இயக்குனர் நிதிலன் சாமிநாதனின் புது படம், கார்த்தி நடிக்கும் சர்தார் 2, ஜெயம் ரவியின் ஜீனி, முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஆகியவற்றுக்கும் இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

* இறுதிச் சுற்று, சூரரைப் போற்று ஆகிய விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்த படங்களை இயக்கிய சுதா கொங்கராவின் புது படம். சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலாவுடன் இதுவரை ஏற்காத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். அதாவது அவருக்கு வில்லன் வேடம். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் அதில் எப்படி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பதே இப்படத்தின் கதை. இதில் முதலில் சூர்யா நடிக்க இருந்தார். திடீரென அவர் விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Collywood ,Sun Pictures ,Rajinikanth ,Nagarjuna ,Satyaraj ,Upendra ,Srutihasan ,
× RELATED மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்