×

இசை அமைக்க வாய்ப்பில்லை ஜோசியரான `காதல்’ பட இசை அமைப்பாளர்

சென்னை: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த `காதல்’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர், ஜோஷ்வா ஸ்ரீதர். தொடர்ந்து சில படங்களில் பணியாற்றிய அவர், திடீரென்று மாயமானார். இந்நிலையில், புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காததால், 2 வருடங்கள் ஜோசியம் சொன்னதாக அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது: கடந்த 2020ல் இசை அமைப்பதை நிறுத்தினேன். 15 வருடங்களாக வருமானத்துக்காக இசை அமைத்தேன். எனக்குப் பிடிக்காத படங்களுக்கு இசை அமைக்கிறேனே என்ற வருத்தத்தில், கடந்த 5 வருடங்களாக நான் இசை அமைக்கவில்லை. இந்த நேரத்தில் கொரோனா லாக்டவுன் வந்தது. சிறுவயதில் இருந்தே ஜோதிடத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்ததால், கொரோனா லாக்டவுனில் ஆறே மாதங்களில் ஜோதிடம் கற்றுக்கொண்டேன். இதிலிருந்துதான் எனக்கு வருமானம் வருகிறது.

Tags : Chennai ,Joshua Sridhar ,Bharath ,Sandhya ,Balaji Sakthivel ,
× RELATED பரத் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!