கஜினி 2ம் பாகத்தில் அமீர்கான்

சென்னை, அக்.21: தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 செப்டம்பர் 29ம் தேதி திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘கஜினி’. சூர்யா, அசின், நயன்தாரா நடித்தனர். இப்படத்தை இந்தியில் ‘கஜினி’ என்ற பெயரில் ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்து இயக்கினார். சூர்யா நடித்திருந்த வேடத்தில் அமீர்கான் நடித்தார். மேலும் அசின், ஜியா கான் நடித்த இப்படம் கடந்த 2008 டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வந்து வெற்றிபெற்றது.

தற்போது ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கிய ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் படத்தில் அமீர்கான், ஜெனிலியா நடித்துள்ளனர். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து அமீர்கான் நடிக்கும் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘கஜினி’ படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கி நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இந்தி ‘கஜினி’ படத் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், மது மந்தெனா ஆகியோரிடம் பேசிய அமீர்கான், 2ம் பாகத்துக்கான ஒன்லைனைச் சொன்னார். அது மிகவும் வித்தியாசமாக இருப்பதாக அவரை படத் தயாரிப்பாளர்கள் பாராட்டியதாக தெரிகிறது.

The post கஜினி 2ம் பாகத்தில் அமீர்கான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: