லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னை: ‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், சுவாசிகா, ஹரிஷ் கல்யாண், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. செப்டம்பர் 20ம் தேதி வெளியான இந்தப் படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் கொண்டாடப்பட்டது.

இப்போதும் படம் வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தப் படத்தினை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட வியாபாரம் செய்திருந்தார்கள். அக்டோபர் 18-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தியேட்டரில் ஓடுவதால் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர். வெளிநாடுகளில் சிம்பிளி சவுத் ஓடிடியில் இந்த படம் வெளியாகும்.

The post லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: