அகண்டா 2வில் பாலகிருஷ்ணா

ஐதராபாத்: பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த படம், ‘அகண்டா’. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் நடித்திருந்தனர். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்திருந்தார். 2021 டிசம்பர் 2ம் தேதி வெளியான இப்படம், 2021ல் அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் பின்னணி இசையும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஓடிடியிலும் இப்படம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து 2ம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், பொயப்பட்டி ஸ்ரீனு, பாலகிருஷ்ணா இருவரும் வெவ்வேறு படங்களில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இணைந்துள்ள படத்துக்கு ‘அகண்டா 2 – தாண்டவம்’ என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடந்தது. பிரக்யா ஜெய்ஸ்வால் ஹீரோயினாக நடிக்கிறார். முதல் பாகத்தில் பணியாற்றியவர்களே 2வது பாகத்திலும் பணியாற்றுகின்றனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்குமா அல்லது புதிய கதையா என்பதை படக்குழு உறுதி செய்யவில்லை.

The post அகண்டா 2வில் பாலகிருஷ்ணா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: