ஒரே நிறுவனத்துக்கு ஜெயம் ரவி 2 படங்கள்

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘டிமான்ட்டி காலனி 2’ என்ற படத்தை தயாரித்திருந்த பிடிஜி யுனிவர்சல், அடுத்து, பிடிஜி யுனிவர்சல் தயாரிக்கும் 2 படங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். இதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பாபி பாலச்சந்திரன், டாக்டர் எம்.மனோஜ் பெனோ இணைந்து தயாரிக்கும் இவ்விரு படங்களில் பணியாற்றுபவர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ என்ற படம், வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதையடுத்து ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜீனி’ ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

The post ஒரே நிறுவனத்துக்கு ஜெயம் ரவி 2 படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: