கிராமங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கிராமங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் தொழில் தொடங்க உரிமம் பெறவேண்டும் என அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. கிராமங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிப் பகுதியில் செயல்படும் டீக்கடைக்கு கூட இனி தொழில் உரிமம் பெற வேண்டும் என்றும், அதற்காக கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெற வேண்டும் என்பது 1958ல் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ல் பிரிவு 159ன் படி, ‘அபாயகரமானதும் மற்றும் தீங்குவிளைவிக்கும் வர்த்தக உரிமம்’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2018ம் ஆண்டு கோவை மாவட்ட அரசிதழ்படி, ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக தொழில் உரிமக் கட்டணம் விதிப்பு அறிவிக்கப்பட்டது. இதில், ஏற்கனவே இருந்த ஒவ்வொரு ஆண்டும் தொழில் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது மாற்றப்பட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது, ஆன்லைனில் உரிமம் பெறுவது உள்ளிட்ட நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டு 09.07.2025 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழில் உரிமம் பெறுவது மற்றும் அதற்கான கட்டண விதிக்கும் நடைமுறையை புதிதாக கொண்டு வந்ததாக தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கிராமங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: