சென்னை: போதைப்பொருள் வழக்கு நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்துவது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்துக்கு பிரதீப் என்பவர் போதைப்பொருளை 40 முறை விற்பனை செய்துள்ளார். பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு போதைப்பொருள் தருவதை நேரடியாக பார்த்தேன்.ஸ்ரீகாந்தும் மேலும் ஒரு நடிகரும், பிரசாத் மூலம் என்னிடம் கொக்கைன் வாங்கினர் என பிரதீப் வாக்குமூலம் அளித்தார். வழக்கில் கைதான பிரதீப் தந்த வாக்குமூலம் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் சப்ளை மூலம் ரூ.5 லட்சம் வரை சம்பாதித்ததாக பிரதீப் வாக்குமூலம் அளித்தார். பிரதீப் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் மேலும் ஒரு நடிகரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
The post போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்திடம் விசாரணை ஏன்? appeared first on Dinakaran.