பின்னர் சிலையை கரைக்கு கொண்டு வந்தனர். சுமார் 5 அடி உயரமுள்ள முகம் சிதிலமடைந்த நிலையில் அம்மன் கற்சிலையாக இருந்தது.
இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கற்சிலை பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது, ஜாதகம், சோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள சிலர் பரிகாரத்திற்காக கடலில் சிலையை வீசினால் நல்லது நடக்கும் என சோதிடர்கள் கூறியதை கேட்டு எவராவது கடற்கரை ஓரம் சிலையை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்றார்.
The post மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்குள் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.
