இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு

இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீரிணையை மூடும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து, ஈரானுக்கு ஆதரவாக ஓமனும் யுத்தத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் உலகின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஹார்முஸ் நீர்முனை பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடாவின் நடுவில் உள்ள பகுதியாகும். பெர்சியன் வளைகுடாவின் ஒரு பகுதியில் ஈரான் உள்ளது. ஒருமுனையில் குவைத் அமைந்துள்ளது. உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெர்சியன் அல்லது அரேபியன் வளைகுடாவில் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே நடைபெற்று வருகிறது.

ஹார்மூஸ் நீரிணையை கடந்து அரபிக் கடல் வழியாக உலகின் பிற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்கின்றன. தற்போது அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்மூஸ் நீரிணையை மூடு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த ஹார்மூஸ் நீரிணை வழியாகவே பெறப்பட்டு வருகிறது. ஹார்மூஸ் நீரிணை மூடும் பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: