டெல்லி: காங். ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஓ.பி.சி மாநாட்டில் பேசிய அவர்,
காங். ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு
ஓ.பி.சி. பிரச்சனை முன்பே அறியாமல் இருந்தது காங்கிரசின் தவறுதான். ஓ.பி.சி. பிரச்சனையை உணராமல் போனது காங்கிரஸும் தானும் செய்த தவறு.
ஓபிசி பிரச்சனை நீருபூத்த நெருப்பாக மாறும்
பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை நீரு பூத்த நெருப்பாக உள்ளது; நிச்சயம் வெளிவரும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஓ.பி.சி. பிரச்சனையை அறிந்திருந்தால் காங். ஆட்சியில் ஜாதிவாரி கணகெடுப்பு நடத்தியிருப்போம். பிற்படுத்தப்பட்டோரின் வரலாறை நான் படிக்காமல் போனதற்கு வருந்துகிறேன்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது தவறுதான்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் போனது எங்கள் தவறுதான். தெலுங்கானாவில் காங். அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
ஓ.பி.சி.க்கு பாஜக துரோகம் செய்துவிட்டது
தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தெலுங்கானாவில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பால் ஒரு சுனாமியே ஏற்பட்டுள்ளது.
ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பமே பிரதமர் மோடி
மோடி பற்றிய பிம்பத்தை ஊடகங்கள்தான் ஊதிப் பெரிதாக்கி விட்டது. மோடியின் தோற்றம்தான் பெரியதே தவிர சரக்கு ஏதும் இல்லை என காட்டமாக விமர்சித்தார். மோடியிடம் ஒரே அறையில் தங்கி இருந்தபோது அவரை பற்றி அறிந்துக் கொண்டேன். மோடி பெரிய விஷயமே இல்லை; அவரிடம் பெரிய சக்தி எதுவும் இல்லை
90% மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு இல்லை –ராகுல்
நாட்டில் 90% உள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கில்லை. மக்கள் தொகையில் 90% தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மை மக்கள் ஆவர். இவ்வாறு தெரிவித்தார்.
The post காங். ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.
