அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை: வழக்கறிஞர் கே.பாலு விளக்கம்

சென்னை: அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸ் எதிர்ப்பையும் மீறி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ராமதாஸ் பெயரில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்க்கு முதல்நாளே பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே அன்புமணி ராமதாஸின் தமிழக உரிமை மீட்பு பயணத்துக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறுகையில்; மருத்துவர் ராமதாஸ் அளித்த புகார் மனுவை மட்டுமே அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் டிஜிபி அலுவலகம் அனுப்பி உள்ளது. செங்கல்பட்டு உத்திரமேரூரில் அன்புமணியின் நடைப்பயணம் திட்டமிட்டப்படி நடைபெறும். அன்புமணியின் நடைப்பயணம் பெரும் வெற்றியை பெறும். தமிழக அரசியலில் அன்புமணியின் நடைப் பயணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அன்புமணியின் நடைப் பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டிஜிபியிடம் ராமதாஸ் மனு கொடுத்திருந்தார்.

 

The post அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை: வழக்கறிஞர் கே.பாலு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: