வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் நாடு முழுவதும் பல கோடி பேரின் வாக்குரிமையை பறிக்க ஒன்றிய பாஜக திட்டம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் நாடு முழுவதும் சிறுபான்மையினர் உள்ளிட்டோரின் வாக்குரிமையை பறிக்க ஒன்றிய பாஜக முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் பா.ஜ.க.,வுக்கு எதிரான ஏழை, எளிய மக்கள், பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்டோரின் வாக்குரிமையை பறிக்க தேர்தல் ஆணையம் மூலம் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

சமூகத்தில் உள்ள பலவீனமான பிரிவினரின் வாக்குரிமையை பறிப்பதே ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க.,வின் விருப்பமாகவும், நீண்டகால நோக்கமாகவும் உள்ளது. தேர்தல் ஆணையம் போன்ற ஒரு அரசியல் அமைப்பு நிறுவனம், பல கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க.,வின் சதிக்கு துணைப் போகிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.,வுக்கு அதிகளவிலான வெறுப்பு உள்ளது. இந்திய அரசியலமைப்பை திருத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகின்றன. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை அழிக்க ஒவ்வொரு நாளும் புது, புது வழிகளை தேடுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் நாடு முழுவதும் பல கோடி பேரின் வாக்குரிமையை பறிக்க ஒன்றிய பாஜக திட்டம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: