மேட்டுப்பாளையம்- நாலாநல்லூர் பொதுப்பாதைக்கு சிமெண்ட் நடைப்பாலம் அமைக்க வேண்டும்

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 14: திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 29வது கிளை மாநாடு யாக்கோப் தலைமையில் நடைபெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ராஜா ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவுச்சின்னத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா மாலைஅணிவித்து வீரவணக்கம்
செலுத்தினார். மாநாட்டை தொடக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறு ப்பினர் ஜோசப் பேசினார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜவகர், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் ரஜினி சுப்பிரமணியன், உலகநாதன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர்களாக பாரதி, சிலம்பரசன் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மேட்டுப்பாளையம் நாலாநல்லூர் பொதுமக்கள் செல்வதற்க்கு புதிய சிமென்ட் நடை பாலம் அமைக்கவும் புதிய தார்சாலை அமைக்க வேண்டும், குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், ஆறு, பாசன, வடிகால் வாய்க்காலில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடிகளை உடன் அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post மேட்டுப்பாளையம்- நாலாநல்லூர் பொதுப்பாதைக்கு சிமெண்ட் நடைப்பாலம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: