தஞ்சாவூர், ஜூன் 14: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கருப்பு துணி கண்ணில் கட்டி கருப்புக்கொடி கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.
கோட்டத் துணைத் தலைவர்கள் திரவியராஜ் ஐயப்பன் மாய கிருஷ்ணன், கோட்டை இணைச் செயலாளர்கள் முருகானந்தம் கலியமூர்த்தி முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் ராதாகிருஷ்ணன் அஜய் ராஜ் தேசிங்கு ராஜன் பாரதி ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் பழனிச்சாமி நிறைவு உரையாற்றினார். கோட்ட பொறியாளர் கருணாநிதி நன்றியுரை கூறினார்.
The post நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கருப்பு துணி கண்ணில் கட்டி கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.