அதை வைத்தே பெரும்பாலான விமான விபத்துகள் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியவரும். தீப்பற்றினாலும் பாதிக்காத வகையில் டைட்டானியம் மற்றும் உலோகங்களால் கருப்புப் பெட்டி வடிவமைக்கப்படும். கடுமையான அழுத்தம் மற்றும் மோதலை தாங்கக்கூடியவை. இந்த நிலையில் அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10 -15 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே அகமதாபாத் விமான விபத்திற்கான சரியான காரணம் தெரியவரும். இதனிடையே விமான விபத்தில் 241 உயிரிழந்துள்ளனர். 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 37 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
The post 241 பேர் பலி.. உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் முக்கியமான கருப்பு பெட்டி மீட்பு !! appeared first on Dinakaran.