தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது; தூத்துக்குடி, தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 5.8.2025, செவ்வாய்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணிகள், பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி (Negatiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 9.8.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக.5ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! appeared first on Dinakaran.
