2 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு ஆளும் பாஜக அரசால் தீர்வு காண முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்தார். கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், மணிப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவர் ஆட்சி ஆகஸ்ட் 13ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 2026ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூலை 25) மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தவுள்ளார்.
The post மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!! appeared first on Dinakaran.
