திருத்தணி, ஜூன் 11: ராணிப்பேட்டை மாவட்டம் ஐப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் நவீன் (27). இவருக்கு திருத்தணி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி சமூக வலைத்தளம் மூலம் பழக்கமானார். பின்னர் இவர்களது தொடர்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் வீட்டைவிட்டுச் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். இதில் தலைமறைவாக இருந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.