பொன்னேரி, ஜூலை 22: மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் கம்மவார்பாளையம் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. எனவே, இப்பகுதியில் புதிய சாலை போட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனை ஏற்று முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பூமி பூஜையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே.ரமேஷ் ராஜ், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி தமிழரசன், ஒன்றிய பொறுப்பாளர் ஆ.ராஜா, அத்திப்பட்டு துணைத் தலைவர் கதிர்வேல், நாலூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுஜாதா ரகு, துணைத்தலைவர் சுரேஷ் பாபு, திமுக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சூரியராஜ், ஹேமச்சந்திரன், விஜி, நாகராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் அத்திப்பட்டு புருஷோத்தமன், வல்லூர் நந்தா, ராஜா ஒப்பந்தக்காரர் குமார் மற்றும் இளைஞர்கள், கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.
The post மீஞ்சூர் நாலூர் ஊராட்சியில் புதிய சாலைக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.
