திருத்தணி, ஜூலை 26: போக்சோ வழக்கை வாபஸ் பெறக்கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகே, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி லதா(30). இவர்களது மகள் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி மகளை பள்ளிக்கு பேருந்தில் அனுப்ப லதா காத்திருந்தார்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(29) என்பவர் தன் மீது ஏற்கனவே போடப்பட்ட போக்சோ வழக்கை வாபஸ் பெற கோரி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் லதா புகார் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சரத்குமாரை சிறையில் அடைத்தனர்.
The post பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.
