ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், வெங்கடாசலதி, பேரூர் அவைத்தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர்கள் பார்த்திபன், திரிபுரசுந்தரி, பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், கும்மிடிபூண்டி தொகுதி தேர்தல் பார்வையாளர் கவிகணேஷ் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். இதேபோல், பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் சந்திரசேகரும், வடக்கு ஒன்றியத்தில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜான்.பொன்னுசாமியும் தலைமை தாங்கினர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ், தேர்தல் பார்வையாளர் கவி கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
The post திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
