மீனவர் வலையில் சிக்கிய 3 ராட்சத சுறா மீன்கள்: கேரள வியாபாரி வாங்கி சென்றார்

 

திருவொற்றியூர்: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் விசைப்படகில் ஜனார்த்தனன், சரண் உள்ளிட்ட சில மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். பின்னர், மீன் பிடித்துக்கொண்டு நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் விசைப்படையில் 3 ராட்சத சுறா மீன்கள் பிடித்து வரப்பட்டது. ஒவ்வொரு மீனும் 400 கிலோ மற்றும் 350 கிலோ அளவில் இருந்தது.

இதனை கிரேன் மூலம் விசைப்படகில் இருந்து இறக்கி, கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சுறா மீன்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டனர். இறுதியில், கேரளாவைச் சேர்ந்த வியாபாரி அவற்றை வாங்கிச் சென்றார். அதை தொடர்ந்து 3 சுறா மீன்களும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை மீன் வாங்க வந்தவர்கள் இந்த ராட்சத சுறா மீன்களை ஆச்சரியமுடன் பார்த்துச் சென்றனர்.

The post மீனவர் வலையில் சிக்கிய 3 ராட்சத சுறா மீன்கள்: கேரள வியாபாரி வாங்கி சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: