சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் எளிதாகவும் குறைந்த நேரத்தில் பயணம் செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015 ஆண்டு ஜூன் 29ம் தேதி தொடங்கியது. விமான நிலையம் – விம்கோ நகர் – சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 2 வழித்தடங்களில் 55 கிமீ தொலைவிற்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது வருகிறது.

மேலும் 3 வழித்தடங்களில் 118 கிமீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, வரும் 29ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. சென்னையில் இதுவரை 39 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதந்தோறும் மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை விரைவில் 1 கோடியை தொடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: