கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 254 தமிழறிஞர்களுக்கு ரூ.4.70 கோடியில் விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்


சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கலைவாணர் அரங்கில் நடந்த ‘செம்மொழி நாள்’ விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடுவதோடு, தமிழ் வளர்ச்சி இயக்ககம் வாயிலாக 29 பிரிவுகளில், 79 அறிஞர்களுக்கு சிறப்பாக செயல்பட்ட தமிழ் அமைப்புக்கும் சேர்த்து 80 விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 254 தமிழறிஞர்களுக்கு ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞர் நினைவிடத்தை 45 லட்சம் பேர் நேற்று வரை பார்வையிட்டுள்ளனர்.

கலைஞர் உலக அருங்காட்சியத்தை 5 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். அண்மையில், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் தமிழ் வார விழாவாக கொண்டாடப்பட்டது. திருக்குறள் வார விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. கலைஞரின் திருவாசகமான சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்பதற்கேற்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மிகச் சிறப்பாக தமிழ் வளர்ச்சித் துறை நம்முடைய அரசு இன்றைக்கு செயல்படுத்துகிறது. அந்த வகையில், இன்றைக்கு பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் மீண்டும் இந்த ஆட்சி அமைவதற்கு நாமெல்லாம் இந்த நேரத்தில், கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி உருவாவதற்கு நாமெல்லாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

The post கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 254 தமிழறிஞர்களுக்கு ரூ.4.70 கோடியில் விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: