கூட்டணி ஆட்சி என்ற கருத்தை அமமுக டிடிவி.தினகரனும் வலியுறுத்தி பேசி வருகிறார். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிமாறன் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், ‘‘பேசுவோர் பேசட்டும். அதிமுக தலைமையில் எத்தனை கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் கூட்டணியே தவிர, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும். எடப்பாடிதான் முதல்வர்’’ என குறிப்பிட்டுள்ளார்.
The post கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.
