தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது: கனிமொழி எம்பி சமூக வலைத்தள பதிவு

சென்னை: திமுக துணைப்பொது செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
தென் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்திட வேண்டி, 17 ஆண்டுகளாக திமுக ஒன்றிய அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்திருகிறது. 2008ம் ஆண்டு தலைவர் கலைஞரால் கோரிக்கை வைக்கப்பட்டு, விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்கு 712.43 ஏக்கர் நிலமானது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளது.

நான் 2012-ல் எழுத்துப்பூர்வமாகவும், 2017 மற்றும் 2024 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்தின் போதும் அக்கோரிக்கையை முன்வைத்ததோடு, 2019 மற்றும் 2021ல் ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினேன். இப்படி எத்தனையோ ஆண்டுகளாக நாம் வைத்த பல்வேறு கோரிக்கைகளின் பலனாக, இன்று நம் தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தூத்துக்குடி மக்களின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் மற்றும் அனைத்து விமானபோக்குவரத்துத் துறை அமைச்சர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது: கனிமொழி எம்பி சமூக வலைத்தள பதிவு appeared first on Dinakaran.

Related Stories: