குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு பாதிப்பு இருந்ததால் கணவன் மனைவி இருவரும் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் 3 பேரும் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது விஷம் கலந்த உணவை முதலில் மகள் தானியலட்சுமிக்கு கொடுத்து கொன்றுள்ளனர்.
பின்னர் நகை ஆசாரியும், மனைவியும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்வதற்கு முன் தங்களது உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிவிட்டு விஷம் குடித்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை செல்போன் வாட்ஸ் அப் தகவலை பார்த்த உறவினர்கள் நாகேந்திரன் வீட்டுக்கு சென்று பார்த்த போது, 3 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.
இத்தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் வந்து, 3 பேரின் சடலங்களையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. கடன் பிரச்னை இல்லை. இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். மேலும் இறுதிச் சடங்கிற்காக கருங்கல்பாளையம் வீட்டில் ரூ.25 ஆயிரம் வைத்துள்ளோம். என எழுதி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post ஈரோடு அருகே சோகம் உணவில் விஷம் கலந்து மகளை கொன்று மனைவியுடன் நகை ஆசாரி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.
