சிட்னி: முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் 6 மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆஸ்திரேலியா ‘அடல்ட் ஸ்டார்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த அன்னி நைட் (28) என்பவர் பாலியல் உறவு கொள்வதில் ஆர்வம் மிக்கவராக (‘அடல்ட் ஸ்டார்’) உள்ளார். இவர், ஆறு மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்டதாகவும், தற்போது தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 583 ஆண்களுடன் உறவு வைத்து கொண்டதற்கு அவருடைய காதலர் அவருக்கு ஊக்கமளித்துள்ளார். அதனால் அவர் துணிச்சலுடன் நூற்றுக்கணக்கான ஆண்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் தனது படுக்கையை பகிர்ந்து கொண்டு உறவு வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு நாளில் 583 ஆண்களுடன் இருப்பது உடலுக்கு நல்லதல்ல’ என்று குறிப்பிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் நீல நிறத்திலான உடையில் மருத்துவமனையில் இருக்கும் செல்ஃபி ஒன்றை வெளியிட்டார். இந்த செயல், அவரது உடல் நலத்தை பாதித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு வழிவகுத்தது. ஏற்கனவே இருந்த சாதனையை முறியடிக்கவே அன்னி நைட், 583 ஆண்களுடன் உறவு கொண்டதாக கூறப்படுகிறது. அன்னி நைட்டின் இந்த செயலை பலர் சர்ச்சைக்குரியதாகவும், ஆபத்தானதாகவும் விமர்சித்தனர். அவரது காதலர், இந்த தனது காதலியின் முயற்சிக்கு அவரை ஊக்குவித்ததாகவும், அதேநேரம் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம், அன்னி நைட்டியின் உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுத்ததோடு, பொது மக்களிடையே பாலியல் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் உடல் நலம் குறித்த விவாதங்களையும் தூண்டியுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் ஊடகங்களில் அன்னி நைட்டின் செயல் கவனம் பெற்றது. இந்த சம்பவம், தனிநபர் முடிவு மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்து மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்கள் உடல் மற்றும் மனநலத்திற்கு எவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
The post முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் 6 மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உடலுறவு: ஆஸ்திரேலியா ‘அடல்ட் ஸ்டார்’ அட்மிட் appeared first on Dinakaran.