வியன்னா: ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள டிரையர்ஷூட்ஸெங்காஸ் உயர்நிலைப் பள்ளிக்குள் நேற்று காலை 11.30 மணிக்கு புகுந்த மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தினார். அடையாளம் தெரியாத நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். இது குறித்த தகவலின்பேரில் அங்கு சிறப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பல மாணவர்கள் காயமடைந்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியாகினார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் குறித்த விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை. பள்ளியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
The post ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி: கொலைகாரனை சுட்டுக் கொன்றது போலீஸ் appeared first on Dinakaran.